சபரிமலையில் நடை சாத்தப்பட்டது
ADDED :2555 days ago
பம்பை : மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் டிசம்பர் 27 ம் தேதி நடைதிறக்கப்பட்டது. இந்நிலையில் பூஜைகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை கோயில் நடை சாத்தப்பட்டது. இனி மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12 ம் தேதி மீண்டும் நடைதிறக்கப்படும்.