உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி: பாக்கம் பாலமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (21ம் தேதி) நடக்கிறது.கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பாக்கம் கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் 65ம் ஆண்டு  பால்காவடி பூஜை மற்றும் தைப்பூச திருவிழா நாளை காலை 7 மணிக்கு நடக்கிறது.விழாவை முன்னிட்டு, இன்று இரவு 7.00 மணிக்கு முருகபெருமான்வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்  நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு பாலவிநாயகர், பாலமுருகன், செல்வமுத்து மாரியம்மன் சன்யாசி அப்பன் காவடிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.காலை 9 மணிக்கு சக்தி, அக்னி,  கோவிந்தன் கரகங்கள், பிரம்மபுரீஷ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தீமித்தல் நடைபெறும். தொடர்ந்து காவடி பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை பாக்கம் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !