உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தைப்பூச கொடியேற்றம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தைப்பூச கொடியேற்றம்

 பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சன்னதியில், தைப்பூச திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.கோவை மாவட்டம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தைப்பூச  திருவிழாவை முன்னிட்டு, பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம், அலங்காரம் முடிந்து,  காலை, 8:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.இன்றிரவு (20ம் தேதி), 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை (21ம் தேதி) காலை, 9:00 மணிக்கு மேல், தைப்பூச தேர்த்திருவிழா  நடக்கிறது. திருத்தேரில் பாலதண்டாயுதபாணி சுவாமி, வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !