உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் கோயிலில் மகோற்சவம்

திருக்கோஷ்டியூர் கோயிலில் மகோற்சவம்

 திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் சவுமியநாராயணப்பெருமாள் கோதை நாச்சியார் தைலக்காப்பு திருக்கல்யாண மகோற்ஸவம் துவங்கியது.சிவகங்கை சமஸ்தானத்தைச்  சேர்ந்த இக்கோயிலில் ஆண்டாள் பிறப்பு முதல் திருக்கல்யாணம் வரையிலான திருக்கல்யாண மகோற்ஸவம் நான்கு நாட்கள் நடைபெறும்.நேற்று மாலை 4:30 மணிக்கு ஆண்டாள் நின்ற  திருக்கோலத்தில் மூலவர் சன்னதிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து கைத்தலத்தில் காட்சியளித்தார். பின்னர் பெரிய பெருமாளிடம் பிரியாவிடைபெற்றார். இன்று காலை ஆண்டாள் தைலக்காப்பு  மண்டபம் எழுந்தருளுகிறார். பின்னர் தைலவீதி சுற்றுதல்,தைலம் சாத்துதல்,நவகலஸ அலங்கார ெஸளரித் திருமஞ்சனமும் நடைபெறும். இரவில் திருவீதி புறப்பாடும் நடைபெறும். நாளை மாலை  ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவை நடைபெறும். ஜன.,22ல் மாலையில் ஆண்டாள் முத்துக்குறி பார்த்தல் நடைபெறும்.ஜன.,23ல் இரவு 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாண மகோற்ஸவமும்  நடைபெறும். இரவில் திருவீதி உலாவுடன் மகோற்ஸவம் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !