உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் கோவிலில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

வள்ளலார் கோவிலில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

 திருத்தணி: வள்ளலார் கோவிலில், நாளை, தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடக்கிறது.திருத்தணி, பெரியார் நகர், அரசு போக்குவரத்து பணிமனை எதிரில், திருஅருட்பிரகாச வள்ளலார் கோவில்  உள்ளது. இக்கோவிலில், நாளை, தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, காலை, 6:00 மணிக்கு, தீபாராதனையும், 6:30 மணிக்கு, அகவல் பாராயணம், காலை, 7:30  மணிக்கு, சன்மார்க்க கொடி உயர்த்துதல், காலை, 9:00 மணிக்கு, திருஅருட்பா பாடல் இசை நிகழ்ச்சி மற்றும் ராமர் பஜனைக் குழுவினர் பக்தி பாடல்கள் பாடப்படுகின்றன. மதியம், 12:10 மணிக்கு,  தைப்பூச ஜோதி தரிசனம், மாலை, 7:00 மணிக்கு, மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !