உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரிபுரசுந்தரி கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம்

திரிபுரசுந்தரி கோவிலில் இன்று சிறப்பு அபிஷேகம்

புதுச்சேரி:இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், ஸ்ம்வத்சரா அபிஷேக மூல மந்திர ஹோமம் மற்றும் மகா ருத்ர ஹோமம் இன்று நடக்கிறது.வானுார் தாலுகா, புதுச்சேரி-திண்டிவனம்  பைபாஸ் சாலை, இரும்பை டோல்கேட் அருகில், குபேரன் நகரில் உள்ள பாலாதிரிபுர சுந்தரி அம்பாள் கோவில் 6ம் ஆண்டு கும்பபாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை 21ம் தேதி  சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.


இதையொட்டி, இன்று (20ம் தேதி) மாலை 5 மணிக்கு, அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, நவ கலச ஸ்தாபனம், வேதிகாரச்சனை, மூல மந்திர ஜபம் ஹோமம்,  தீபாராதனை நடக்கிறது. நாளை (21ம் தேதி) காலை 7 மணிக்கு கோ பூஜை, வேதிகார்ச்சனை, மூல மந்திர ஹோமம், மகா ருத்ர ஹோமம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், பாலா திரிபுர சுந்தரி  அம்பாளுக்கு நெய்வேத்திய உபசாரம், தீபாராதனை நடக்கிறது.மாலை 7 மணிக்கு மூலவர் விஷேச அலங்காரம், நவசக்தி அர்ச்சனை, தீபாராதனை, உற்சவர் ஆலய உள்புறப்பாடு நடக்கிறது. 21ம்  தேதி மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.ஏற்பாடுகளை பாலாதிரிபுர சுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் கணேஷ், உபதலைவர்  சீனுவாசன், பொருளாளர் செந்தில், உதவி செயலாளர் வரதராஜூலு ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !