உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரமணியர் கோவிலில் கும்பாபிஷேகம்

சுப்ரமணியர் கோவிலில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: மொரட்டாண்டி சண்முக சுப்பரமணிய கோவிலில் கும்பாபிஷேகம் இன்று (20ம் தேதி) நடக்கிறது.வானுார் மொரட்டாண்டி கிராமத்தில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத சண்முக  சுப்ரமணியர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது.விழாவை முன்னிட்டு, கடந்த 18ம் தேதி காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி  ஹோமம், கஜபூஜை, அஸ்வ பூஜையும், மாலை 4.30 மணிக்கு அங்குரார்பணம், பிரவேசபலி, கும்பாலங்காரம், முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு யாக சாலை பிரவேசம்,  இரண்டாம் கால பூஜையும், 10 மணிக்கு பிம்பசுத்தி அஷ்டாதசக்ரி, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜை, இரவு எந்திர பிரதிஷ்டை அஷ்டபந்தம் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை 5  மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, கலச புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் வள்ளி தேவசேனா சமேத சண்முக சுப்பரமணிய சுவாமிக்கு மகா  கும்பாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !