அய்யலூரில் 52 அடி உயர முருகனுக்கு கும்பாபிஷேகம்
ADDED :2484 days ago
வடமதுரை: அய்யலுார் தீத்தாகிழவனுாரில் வினைதீர்க்கும் விநாயகர், ஆதிசிவன், சேவுகப்பெருமாள், பேசும் பழனிஆண்டவர், கானகத்து மாரியம்மன், நவகிரக சுவாமிகளுடன் கோயில் அமைந்துள்ளது. இங்கு முருகனுக்கு 52 அடி உயரத்தில் ஆடு வாகனத்துடன் முருகன் சிலையும், 32 அடி உயரத்தில் கானகத்து மாரியம்மன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரண்டு கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை ஆதிநாராயண பெருமாள் கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.