உலக நன்மை வேண்டி சத்யநாராயண பூஜை
ADDED :2484 days ago
திருமங்கலம் : (வி.எச்.பி.,) சார்பில் கள்ளிக்குடி மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் உலக நன்மை வேண்டி சத்ய நாராயண பூஜை நடந்தது.மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேசன், பா.ஜ., செயற்குழு உறுப்பினர் ரவிபாலா, கள்ளிக்குடி கிராம தலைவர் ஆலடியான், செயலர் ராதாகிருஷ்ணன், மச்சமுனி சித்தர் சபை நிர்வாகி பொன்னம்பலம், துறவியர் பேரவை தலைவர் சுவாமி சதாசிவானந்தா, சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா, வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர். கிராம கோயில் பூஜாரிகள் பேரவை தலைவர் நடராஜன் பூஜைகளை நடத்தினார். ஏராளமான தம்பதிகள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.