உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருவூர் முருகன் கோவிலில் 1,008 பால்குட விழா

மருவூர் முருகன் கோவிலில் 1,008 பால்குட விழா

சோத்துப்பாக்கம்: மருவூர் முருகன் கோவிலில் நேற்று (ஜன., 20ல்), தைப்பூச விழாவை முன்னிட்டு, காவடி விழா சிறப்பாக நடைபெற்றது.

சோத்துப்பாக்கம் - வந்தவாசி சாலையில், மருவூர் முருகன் கோவில் உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு இக்கோவிலில் நேற்று, 1,008 பால்குடம் மற்றும், 1,008 காவடி விழா விமரிசையாக நேற்று (ஜன., 20ல்), நடைபெற்றது.

சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகளுடன் ஊர்வலமாக வந்தனர். அச்சிறுப்பாக்கத்தில் துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மருவூர் முருகன் கோவிலில் முடிவுற்ற காவடித் திருவிழாவில், ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி நிறுவனர், கோ.ப.செந்தில்குமார் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !