உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாடிப்பட்டி அருகே உச்சிகாளியம்மன், கும்பாபிஷேகம்

வாடிப்பட்டி அருகே உச்சிகாளியம்மன், கும்பாபிஷேகம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே பூச்சம்பட்டியில் சடையாண்டி சுவாமி, உச்சிகாளியம்மன், பகவதி அம்மன், கல்யாண நவக்கிரக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

சங்கரநாராயணன் சாஸ்திரிகள் தலைமையில் கணபதி ஹோமம், சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று (ஜன., 20ல்) புனித நீரை கோபுர கலசத்தில் சிவாச்சார்யார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !