உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டைபாளையத்தில் ஜோதி தரிசன விழா

கோட்டைபாளையத்தில் ஜோதி தரிசன விழா

கோவில்பாளையம்:இறைவனை ஜோதிரூபமாக வழிபட்டு, மூடப்பழக்கங்கள் இல்லாமல், மெய்யின்பம் காண வழிகாட்டிய வள்ளலார், தைப்பூச நாளில் சித்தி அடைந்தார். எனவே, தைப்பூச நாளன்று, சத்திய ஞான சபைகளில் ஜோதி தரிசன விழா நடக்கிறது.கோட்டைபாளையம், ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர் நிறுவன வளாகத்தில், அமைந்துள்ள ஞானசபை வளாகத்தில் இன்று (ஜன., 21ல்) விழா நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு ஏழு திரைகள் விலக்கப்பட்டு, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. ஜோதி வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !