உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவேடகத்தில் பூபால அய்யனார், மந்தை கருப்பணசுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம்

திருவேடகத்தில் பூபால அய்யனார், மந்தை கருப்பணசுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகத்தில் பூபால அய்யனார், மந்தை கருப்பண சுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.

கணேசன்பட்டர் தலைமையில் ஜன., 20 கணபதி ஹோமம் முதல் கால பூஜையும்,நேற்று (ஜன., 21ல்) காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. பின் சிவாச்சார்யார்கள் புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !