உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புல்லரம்பாக்கம் குமாரசுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

புல்லரம்பாக்கம் குமாரசுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

புல்லரம்பாக்கம்: புல்லரம்பாக்கம், குமாரசுவாமி கோவிலில், மஹா கும்பாபிஷேகம், நேற்று (ஜன., 21ல்) நடந்தது.திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில் குமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேக விழா, கடந்த 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

அதை தொடர்ந்து நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை நடந்தது. மறுநாள், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. அன்று, மாலை, யாக பூஜை நடந்தது. நேற்று (ஜன., 21ல்), காலை, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு, விசேஷ அலங்காரத்துடன், வள்ளி, தெய்வானை சமேத குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !