உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் தேரோட்டம்

விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் தேரோட்டம்

விருதுநகர்: விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச விழாவை யொட்டி நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று வாலசுப்பிரமணியசுவாமி , வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து மாலையில் தேரோட்டம் நடந்தது. வாலசுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை தேரில் வீற்றிருக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மெயின் பஜார், தெற்கு ரதவீதி, மேற்கு தரவீதி, வடக்கு ரதவீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !