உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள, கடவரப்பள்ளியில், ஊர்மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி, கடந்த, 18ல்
மாரியம்மனுக்கு சிறப்பு கங்கா பூஜை, தீபாராதனை நடந்தது.

மறுநாள், விநாயகர் பூஜை கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், கலச ஆவாஹனம், வேதிகார்ச்சனை, அக்னி பிரதிஷ்டை ஆகிய பூஜைகள் நடந்தன. கிராம மக்கள் மஞ்சள் நீர்,
பால் குடங்களை எடுத்து வந்து, கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

சிறப்பு அலங்காரத்தில், ஊர்மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நடந்து வருகிறது.

* தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த, மணியம்பாடியில், கணவாய் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜை நடந்தது. தங்கள்
வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், பொங்கலிட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !