2 ஆயிரம் காவடிகளுடன் நகரத்தார் வழிபாடு
ADDED :2454 days ago
பழநி, தைப்பூச விழாவை முன்னிட்டு, காரைக்குடி நகரத்தார் சமூகத்தை சேர்ந்தோர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவடிகளுடன் பழநி முருகன் கோவிலில் வழிபாடு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, பொன்னமராவதி, கண்டனுார், புதுவயல் உள்ளிட்ட செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குன்றக்குடியில் ஜன.,15ல் பாதயாத்திரை புறப்பட்டு ஜன.,20ல் வைரவேலுடன் பழநி வந்தடைந்தனர்.திருக்கல்யாணம், தேரோட்டத்தில் பங்கேற்றவர்கள், நேற்று வைரவேலுக்கு சிறப்பு பூஜை செய்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவடி மற்றும் பால்குடங்களுடன் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தை வலம்வந்து முருகனை தரிசித்தனர்.காவடி குழுவினர் கூறும் போது, 400 ஆண்டுகளுக்கும் மேலாக, பாரம்பரிய வைரவேலுடன் பழநிக்கு காவடி எடுத்து வருகிறோம், என்றனர்.