தர்மபுரி மாவட்டத்தில், வள்ளலார் ஜோதி தரிசனம் ஏராளமானோர் பங்கேற்பு
ADDED :2452 days ago
பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில், வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருவருட்பா அகவல் பாராயணம் ஆகியவை நடந்தது. இதையடுத்து, சன்மார்க்க கொடியுடன் வள்ளலார் படத்தை, கையில் ஏந்தி பக்தர்கள் தெருக்களில் ஊர்வலமாக வந்தனர். பின், கண்ணாடி பேழையில், விளக்கேற்றி ஜோதி தரிசனம், சிறப்பு பூஜைகள் நடந்தன.
வள்ளலார் குறித்த, பாடல்கள் பாடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பாப்பாரப்பட்டி, அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.