உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளாநத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்

பிள்ளாநத்தம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்

மல்லசமுத்திரம்: பிள்ளாநத்தம் கிராமத்தில், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. மல்லசமுத்திரம் ஒன்றியம், பிள்ளாநத்தம் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள
ஆதிபிள்ளையார், அரசு வேம்பு விநாயகர், மகா கணபதி, மகா மாரியம்மன், மாதேஸ்வரன், கருப்பணார் கோவிலில், கடந்த, 13ல் கும்பாபிஷேக விழா துவங்கியது.

தினமும், பல்வேறு அபிஷேக, ஆராதனை நடந்தது. ஆற்றிலிருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். நேற்று (ஜன., 23ல்) காலை, 7:00 மணிக்கு புண்யாகம், இரண்டாம் கால யாக பூஜை, 9:45 மணி முதல், 10:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !