உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உண்டியல் காணிக்கை ரூ. 1.17 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உண்டியல் காணிக்கை ரூ. 1.17 கோடி

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் உண்டியலில், 1.17 கோடி ரூபாயை பக்தர்கள், காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, நேற்று காலை, 8:00 மணிக்கு துவங்கி, இரவு, 6:30 வரை நடந்தது. கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமையில், 250 பேர் உண்டியல் திறந்து, காணிக்கையை எண்ணினர். இதில், ஒரு கோடியே, 17 லட்சத்து, 33 ஆயிரத்து, 66 ரூபாய், 122 கிராம் தங்கம், 1,580 கி.கிராம் வெள்ளியை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !