தை மாத சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் கோவில்களில் பூஜை
ADDED :2504 days ago
வீரபாண்டி: சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, அரியானூர் பிரிவில் பழமையான மகா கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியான நேற்று, கணபதிக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு, வெள்ளிகவசம் சார்த்தப்பட்டது. மாலையில் நடந்த சதுர்த்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆட்டையாம்பட்டி, கைலாசம்பாளையம் புதூரில் உள்ள ராஜகணபதி கோவிலில் நடந்த விழாவில், மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. இதே போல், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அமைந்துள்ள ஐந்து விநாயகருக்கும், அபி?ஷகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து பூஜைகள் செய்யப்பட்டன.