உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

குமாரபாளையம்: குமாரபாளையம், சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. சங்கடஹர சதுர்த்தியையொட்டி, குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் உள்ள ராஜவிநாயகர், காசி விஸ்வேஸ்வரர், மகேஸ்வரர், சவுண்டம்மன், ஐயப்பன் உள்ளிட்ட பல கோவில்களில், விநாயகருக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. அருகம்புல், எருக்கம்பூ மாலை அணிவிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !