உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சியம்மன் கோவிலில் தைப்பூச விழா கோலாகலம்

பச்சியம்மன் கோவிலில் தைப்பூச விழா கோலாகலம்

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே, செக்கோடி பஞ்., க்கு உட்பட்ட மோட்டுப்பட்டி பச்சியம்மன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி, திருவிழா நடந்தது. காலை, 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன், ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு பொங்கல் வைத்தல், இரவு, 8:00 மணிக்கு கரகம் தலைகூடுதல், வாணவேடிக்கை, அம்மன் நகர்வலம் வருதல் நடந்தது. தொடர்ந்து, தாலாட்டு மங்கள ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில், மோட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !