உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளாத்துாரம்மனுக்கு பாலாபிஷேகம்

வெள்ளாத்துாரம்மனுக்கு பாலாபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: வெள்ளிக்கிழமையை ஒட்டி, வெள்ளாத்துாரம்மனுக்கு, நேற்று காலை சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது, வெள்ளாத்துாரம்மன்  கோவில்.


அந்த அம்மனை குலதெய்வமாக வணங்கும் பக்தர்கள், ஆடி மற்றும் தை மாதங்களில், குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்திருந்து, பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.நேற்று, வெள்ளிக்கிழமையை ஒட்டி, ஆர்.கே.பேட்டை, வங்கனுார், பொதட்டூர்பேட்டை,  ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர், கோவிலுக்கு வந்திருந்தனர்.காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல்  வைத்தனர்.ஆந்திர மாநிலம், நகரி, புதுப்பேட்டை, புத்துார், நாராயணவனம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் இரவில் தங்கி, இன்று காலை வீடு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !