உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நிறைவு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நிறைவு!

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலியின் நிறைவு நாளான நேற்று புவனேஷ்வர் அரூபா காயத்ரி, பிராவத ஓடிசி நாட்டியத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். நாட்டிய கலைஞர்கள் தங்களின் நாட்டியத்தை நடராஜருக்கு அர்ப்பணிக்கும் விதமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 31வது ஆண்டு நாட்டியாஞ்சலி கடந்த 20ம் தேதி துவங்கியது. கடந்த ஐந்து நாட்களாக அமெரிக்கா, ஆஸ்திரிலேயா, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், பல மாநிலங்களை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி நாட்டிய ரசிகர்களை மகிழ்வித்தனர். நிறைவு நாளான நேற்று நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சிதம்பரம் அனுஷா, டில்லி வாசு, தஞ்சை நாட்டிய கலாலய மாணவியர், சென்னை முருக சங்கரி ஆகியோரின் பரதம், பெங்களூர் உதய கலா நிகேதனா மாணவியரின் நாட்டிய நாடகம், தும்கூர் நீலாலய நிருத்ய கேந்த்ரா மாணவியரின் சிவ நிருத்யாஞ்சலி, புவனேஷ்வர் அரூபா காயத்ரி, பிராவத்தின் ஓடிசி நாட்டியம், சென்னை தேவி நிருத்தியாலயா  மாணவியரின் பார்வதி பரிணயம் நாட்டிய நாடகம், டில்லி பூர்வா தன ஸ்ரீயின் விலாசினி நாட்டியம் நடந்தது. தொடர்ந்து திருவனந்தபுரம் ராஜஸ்ரீ வாரியர் மாணவியர் பரதம், சென்னை பத்மாலயா மாணவியரின் ஆடவே அருள்புரிவாய் நாட்டிய நாடகம், திருச்சி சுப்ரியா ரவிக்குமார் மற்றும் மாணவியரின் பரதம், கடலூர் ஸ்ரீ நடராஜ நாட்டிய கலாகேந்திரா நாட்டிய பள்ளி மாணவியரின் பரதம் ஆகியன நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !