உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் அக்ரஹாரத்தில், ராதாமாதவ திருக்கல்யாணம்

கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் அக்ரஹாரத்தில், ராதாமாதவ திருக்கல்யாணம்

கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் அக்ரஹாரத்தில், ராதா மாதவ மஹோத்ஸவம் முன்னிட்டு, மாப்பிள்ளை அழைப்பு, கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் அக்ரஹாரத்தில், ராதா மாதவ திருக்கல்யாணம் நிகழ்ச்சி கடந்த, 25ல் தொடங்கியது. நேற்று (ஜன., 27ல்) காலை அக்ரஹார வீதியில், ராதாகிருஷ்ண பாகவதரின் பட ஊர்வலம், மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது, ஊர்வலத்தின் முன்னால், பெண்கள் கோலாட்டம் ஆடிச் சென்றனர். அதன் பின், ராதா மாதவ திருக் கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !