கோவில் திருப்பணி நடக்க அறநிலைய அனுமதி தேவை
ADDED :2547 days ago
திருப்போரூர்: காயார், அடேஸ்வரர் கோவிலில் திருப்பணி மேற்கொள்ள, இந்து அறநிலையத் துறை அனுமதி அளிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தில், 800 ஆண்டுகள் பழமையான அடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத் துறை நிர்வகிக்கும் இக்கோவிலை, உபயதாரர்கள் மூலம் புதுப்பிக்க, காயார் மக்கள் முடிவு செய்தனர். இதற்காக, உபயதாரர்கள் விபரங்களுடன், கோவிலில் திருப்பணி மேற்கொள்ள, அறநிலையத் துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், காயார் மக்கள், திருப்பணிக்கு அனுமதி கிடைக்க, அரசின் கவனத்தை ஈர்க்கவும், பொதுமக்கள் அறியவும், இதுகுறித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.