உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா

காமாட்சி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா

உடுமலை: உடுமலை தளி ரோடு ஏகாம்பரேஸ்வரர் சமேத விஸ்வகர்ம காமாட்சி அம்மன் கோவிலில், லட்சார்ச்சனை விழா, கடந்த 25ம் தேதி வேதபாராயணம், புண்யாகவாசத்துடன் துவங்கியது.தொடர்ந்து, இரண்டாம் நாள், திருமுறைபாராயணம், காலையில், முதற்கால லட்சார்ச்சனை, மாலையில் இரண்டாம் கால லட்சார்ச்சனை நடந்தன.நேற்றுமுன்தினம், காலையில், மூன்றாம் கால லட்சார்ச்சனை மற்றும் தீபாராதனையும், மாலையில், லலிதா சகஸ்ரநாம ேஹாமம், தேவிகட்கமாலா ேஹாமத்தை தொடர்ந்து, நான்காம் கால லட்சார்ச்சனை இடம்பெற்றன.நேற்று, சர்வ மங்களாம்பிகா ேஹாமம், திருஷ்டி துர்கா ேஹாமம், ஐந்தாம் கால லட்சார்ச்சனை நடந்தது. மாலையில், பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜையும், ஆறாம் கால லட்சார்ச்சனை, சுமங்கலி பூஜையும் நடந்தன. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !