உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை முனியாண்டி கோயிலில் வழிபாடு

மானாமதுரை முனியாண்டி கோயிலில் வழிபாடு

மானாமதுரை : மானாமதுரையில் மதுரை --ராமேஸ்வரம் ரோட்டில் சூலாயுத வடிவில் அமைந்துள்ள தல்லாகுளம் முனியாண்டி கோயிலில் கிடா வெட்டு வழிபாட்டு விழா நடந்தது.மானாமதுரை பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சேவா சங்கம் சார்பில் பாஸ்கரன் தலைமையில் நடந்த இந்த வழிபாட்டு விழாவை முன்னிட்டு முனியப்ப சுவாமி சன்னதி முன் கிடாக்கள் வெட்டி பலி கொடுக்கப்பட்டன. பொங்கல் உள்ளிட்ட படையல் வைத்து முனியாண்டி சுவாமிக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை,மகா தீபாராதனை நடைபெற்றது.அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !