உடுமலை அருகே தைப்பூச தேர்த்திருவிழா
ADDED :2465 days ago
உடுமலை: உடுமலை அருகே ராகல்பாவி கிராமத்தில், 24 மனை தெலுங்கு செட்டியார் சொந்தங்கள் அமைப்பு சார்பில், பாரம்பரியமாக தைப்பூசத்தேர்த்திருவிழா கொண்டாடப் படுகிறது.
இந்தாண்டு, 60 அடிக்கு, வண்ண கோலப்பொடியால், தேர் வரையப்பட்டு, மத்தியில், சுவாமி வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், தங்கள் வீடுகளில் இருந்து, மாவிளக்கு எடுத்து வந்தனர். முருகனை வாழ்த்தி, பெண்கள் கும்மியடித்து பாடல்கள் பாடினர். பின்னர், நடந்த சிறப்பு பூஜையில், திரளாக மக்கள் பங்கேற்றனர். சுவாமிக்கு படைக்கப்பட்ட, பிரசாதங்கள், அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.