கோத்தகிரி அருகே ஜெடையலிங்க சுவாமி திருவிழா
ADDED :2464 days ago
கோத்தகிரி:கோத்தகிரி சேலக்கொரை கிராமத்தில், நடந்த ஜெடையலிங்க சுவாமி கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இத்திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன்துவங்கியது. தொடர்ந்து, ஐயனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் (ஜன., 27ல்) இரவு, கத்திகை என்ற அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய திருவிழா நாளான நேற்று (ஜன., 28ல்), காலை, 6:00 மணிமுதல், ஐயனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, பஜனை, ஆடல்பாடல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மாலை, 3:00 மணிக்கு, ஐயன் சன்னிதானத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.