வடபழனி முருகன் கோவில் தக்காராக தினமலர் ஆதிமூலம் நியமனம்
சென்னை : சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில் தக்காராக, தினமலர் நாளிதழின், வர்த்தக பிரிவு இயக்குனரும், கோவை பதிப்பு வெளியீட்டாளருமான, எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடபழனி ஆண்டவர் கோவில், முதுநிலை திருக்கோவில். இது, அறநிலையத் துறை துணை கமிஷனர் மற்றும் அலுவல் சார் தக்காரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அலுவல் சார் தக்காராக, கோவில் துணை கமிஷனரே செயல்பட்டு வந்தார். தற்போது, கோவிலின் நிர்வாக நலன் கருதி, அலுவல் சாரா தக்காராக, தினமலர் நாளிதழின் வர்த்தக பிரிவு இயக்குனரும்,கோவை பதிப்பின் வெளியீட்டாளருமான, எல்.ஆதிமூலம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, அவரிடம், தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஹிந்து சமயஅறநிலையத்துறை கூடுதல் கமிஷனர், பணீந்திர ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.