வால்பாறையில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :2557 days ago
வால்பாறை:தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, வால்பாறை கோவில்களில் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவரை தரிசிப்பதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில், கால பைரவருக்கு அஷ்டமி தினமான நேற்று முன் தினம் (ஜன., 28ல்) மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.