உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.

அதனையொட்டி, நேற்று முன்தினம் (ஜன., 28ல்) சிறப்பு யாகமும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேகமும் பால் தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.

கைலாசநாதர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. நடுவீரப்பட்டுசி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர் கோவில், சொக்கநாதர் கோவில்களில் நேற்று முன்தினம் (ஜன., 28ல்) இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்; 8:30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பைரவரை வழிபட்டனர்.

அதேபோல் நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.பண்ருட்டிபைரவர் சன்னதியில் யாகசாலை, குண்டங்கள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாக பூஜை நடந்தது. பின்னர் கலச நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பைரவருககு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !