புதுக்கோட்டையில் பழனி பாதயாத்திரை: பக்தர்கள் சுகவீனம்
புதுக்கோட்டை: பழனி பாதயாத்திரை சென்றவர்கள், சாப்பிட்ட உணவு பிரச்னையால், 100க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள ஆரியூரைச் சேர்ந்த பக்தர்கள், 100க்கும் மேற்பட்டோர், ஒரு குழுவாக, 26ம் தேதி பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். அங்கு சென்ற பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி, நேற்று முன்தினம் (ஜன., 28ல்) இரவு அனைவரும் இணைந்து, உணவு சமைத்து சாப்பிட்டு, அன்று இரவே ஆரியூருக்கு கிளம்பினர். இந்நிலையில் நேற்று (ஜன., 29ல்)காலை, ஆரியூர் வந்த சிலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
உடனடியாக அவர்களை, மதியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு
சென்றுள்ள னர். மேலும் பலர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யிலும், சிலர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டதால், அன்ன வாசல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.