ஓமலூர் வந்த ஆதியோகி ரதம்
ADDED :2446 days ago
ஓமலூர்: ஈஷா யோகா மையம் சார்பில், கோவையில், மார்ச், 4ல், மகா சிவராத்திரி விழா நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மையம் சார்பில்,
ஆதியோகி சிலை ரதம், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறது.
அதன்படி, ஈரோட்டிலிருந்து, சங்ககிரி, இரும்பாலை, முத்துநாயக்கன்பட்டி வழியாக, நேற்று (ஜன., 31ல்) மாலை, ஓமலூர் வந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகே, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
அவர்களுக்கு, மகா சிவராத்திரி குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. பின், கருப்பூரிலுள்ள லிங்கபைரவி கோவிலுக்கு சென்றது. இன்று காலை, சேலம் நகரில் ஊர்வலமாக செல்லவுள்ளது.