உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டையில் கோவிலை இடிக்க எதிர்ப்பு திரும்பிச் சென்ற அதிகாரிகள்

அவலூர்பேட்டையில் கோவிலை இடிக்க எதிர்ப்பு திரும்பிச் சென்ற அதிகாரிகள்

அவலூர்பேட்டை:வளத்தியில் சாலையை அகலப்படுத்த பிள்ளையார் கோவிலை இடிக்க நெடுஞ்சாலை துறையினர் வந்ததால் பரபரப்பு நிலவியது.மேல்மலையனூர் அடுத்த
வளத்தியில் செஞ்சி, ஆற்காடு, மேல்மலையனூர் சாலைகள் சந்திப்பு இடத்தில் 150 ஆண்டு களுக்கும் மேலான இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஓட்டு கட்டடத்திலான ஏழைப் பிள்ளையார் கோவில் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் மாநில நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள் நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்துவதற்காக, கோவிலை அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறி மாநில நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ்
வழங்கினர். இதை தொடர்ந்து நேற்று காலை 11:30 மணிக்கு தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட உதவி பொறியாளர் பிரபுராஜன், பணியாளர்களுடன் கோவிலை இடித்து அகற்ற
வந்தார்.

இதனையறிந்த தி.மு.க., ஒன்றிய செயலர் நெடுஞ்செழியன், வன்னியர் சங்க மாநில துணை அமைப்பாளர் ராஜேந்திரன், வி.சி., மாநில அமைப்பாளர் துரைவளவன், மா.கம்யூ.,கிளைச் செயலாளர் விஜயகுமார் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டு பணியை தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து வந்த வளத்தி இன்ஸ்பெக்டர் குமரபாலன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இந்த சாலை அருகிலேயே கோவில் கட்ட இடம் மற்றும் கோவிலைக் கட்ட 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை மேலிடத் திற்கு தெரிவிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !