உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருள் தரும் ஆதிவழிவிடும் விநாயகர்

அருள் தரும் ஆதிவழிவிடும் விநாயகர்

ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் அடியார்க்கெல்லாம் அருள் தந்து வீற்றிருக்கிறார்.700 ஆண்டுகளுக்கும் முன்பு பாண்டிய மன்னரால் குடமுழுக்கு செய்யப்பட்டதாக கூறப்படும் இக்கோயில் நாளடைவில் இயற்கை சீற்றம் மற்றும் பராமரிப்பு இன்மையால் இடிந்து சிதிலமடைந்து போனது. இக்கோயிலை ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்றத்தை சேர்ந்த ராமராஜ் புனரமைத்து கும்பாபிேஷகம் நடத்தி தொடர் வழிபாட்டிற்கு வழிவகுத்துள்ளார். முன்பு இக்கோயில் கற்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், வழிபோக்கர்கள் தங்கும் மண்டபத்துடன் இருந்து வந்துள்ளது. அதே நிலையில் புனரமைத்துள்ளார்.

வழக்கமாகப் பிற கோயில்களில் கொண்டாடுவதைப் போலவே விநாயகர் சதுர்த்தி 1 வாரத்திற்கு மேல் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவதுடன் நடைதிறப்பு காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4 :00மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும். அத்துடன் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலைப்போல இத்தலத்திலும் தினமும் கணபதி ஹோமம் நடைபெற்று வருகிறது. ஆதி கோயிலாகவும் அமைந்து தினமும் பல்வேறு பூஜை ஹோமங்கள் தொடர்ந்து வருவதால் பக்தர்களுக்கு அருள் தரும் விநாயகராக மூலவர் அமைந்துள்ளார். கோயிலின் சிறப்பை அறிய 76398 64490 பேசலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !