உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தபுரம் வீரபத்ர கோவிலில் கதவு அமைக்கும் பணி தீவிரம்

அனுமந்தபுரம் வீரபத்ர கோவிலில் கதவு அமைக்கும் பணி தீவிரம்

 திருப்போரூர்: அனுமந்தபுரம் அகோர வீரபத்ரர் கோவிலில், ராஜகோபுர வாசலுக்கான கதவு அமைக்கும் பணி நடக்கிறது.திருப்போரூர் அடுத்த அனுமந்தபுரத்தில், அகோர வீரபத்ரர் கோவில் உள்ளது. செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில், மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில், சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

அந்நாட்களில், தாம்பரம், சிங்கபெருமாள்கோவில், செங்கல்பட்டு ஆகிய நகரங்களிலிருந்து இக்கோவிலுக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோவிலுக்கு, ராஜகோபுரம் கட்ட பக்தர்கள் முடிவு செய்து, உபயதாரர்கள் உதவியுடன் பணி துவங்கப்பட்டது.ராஜகோபுர சுதை சிற்பங்களுக்கு வண்ணம் அடித்தல் முடிந்து, 16.5 அடி உயரமும், 7.5 அடி அகலமும் உடைய இரு கதவுகள் பொருத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.இதுகுறித்து, வீரபத்ரர் கோவில் நிர்வாகம் கூறியதாவது:உபயதாரர்கள் மூலம் கோவிலுக்கு சுற்றுச்சுவர், அலுவலகம் அமைக்கும் பணி மற்றும் உற்சவ வாகனங்கள் சீரமைப்பு பணி துவங்கப்படஉள்ளது.வரும் ஜூன் மாதம், ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு ஏற்ப, அனைத்து பணிகளும் நடக்கின்றன.திருப்பணியில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், கோவில் செயல் அலுவலரை அணுகலாம்.இவ்வாறு, கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !