சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2439 days ago
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (பிப்., 3ல்) பகல், 12:00 மணிக்கு, சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடக்கிறது. சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் செய்து வருகிறார்.