பவானி ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில், சாரதாம்பாள் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2489 days ago
பவானி: பவானி ஸ்ரீசிருங்கேரி சங்கர மடத்தில், தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, உலக நன்மை வேண்டி, 1008 விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுமங்கலி பூஜை, லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை மற்றும் சாரதாம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான சுமங்கலி பெண்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பவானி சங்கர மட தர்மாதிகாரி வெங்கட்ராமன், சத்குரு பஜனா மண்டலி நிர்வாகி காயத்ரி தேவி, விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.