உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மாரியம்மன்கோயில் மாசித் திருவிழா துவக்கம்

பழநி மாரியம்மன்கோயில் மாசித் திருவிழா துவக்கம்

பழநி:பழநி கிழக்குரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா, நேற்று (பிப்., 1ல்) முகூர்த்தகால் ஊன்றுதலுடன் துவங்கியுள்ளது.

பழநி முருகன்கோயில் உபகோயிலான, மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னி ட்டு, நேற்றிரவு (பிப்., 1ல்)முகூர்த்தக்கால் நடப்பட்டது. பிப்.,5ல் திருக்கம்பம் சாட்டுதல், பிப்.,12ல் இரவு கொடியேற்றமும், பூவோடு வைத்தல் நடக்கிறது.

பிப்.,13ல் அடிவாரம் குமாரசமுத்திரம் அழகுநாச்சியம்மன் கோயில்களில் திருக்கல்யாணமும், பிப்.,19ல் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணமும், பிப்.,20ல் தேரோட்டமும் நடைபெறும்.

விழாநாட்களில் மாரியம்மன் தங்கமயில், சப்பரம், தங்கக்குதிரை, யானை, சிம்மம் ஆகிய வாகனங்களில் உலா வருதல் நடக்கிறது.

பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !