கொடுமுடி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2439 days ago
கொடுமுடி: கொடுமுடி வட்டாரம், சிவகிரி ஜீவா தெருவில், கற்பக விநாயகர், பாலமுருகன், ஐயப்பன் கோவில் அமைந்துள்ளன. வரும் 10ம் தேதி, காலை, 8:30 மணிக்கு, கும்பாபிஷேக விழா, நடக்க உள்ளது.
முன்னதாக, 9ம் தேதி, காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், காலை, 9:00 மணிக்கு, காவிரிக்கு சென்று, தீர்த்தம் எடுத்தல் நடக்கிறது. பிற்பகல், 3:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா, முளைப் பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலம் நடக்கிறது. 10ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து, கலச புறப்பாடு நடக்கிறது.
காலை, 8:30 மணிக்கு, கற்பக விநாயகர், விமானத்துக்கு, மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. தொடர்ந்து காலை, 9:30 மணி முதல், மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.