உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

நாகாத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

புதுச்சேரி:கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.புதுச்சேரி, கொட்டுப்பாளையம் இ.சி.ஆர்., சாலையில் நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தை வெள்ளிக் கிழமை முன்னிட்டு, உலக நன்மைக்காக, திருவிளக்கு  பூஜை நேற்று மாலை 6:00 மணிக்கு நடந்தது.திருவிளக்கு பூஜையில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. பூஜைக்கான  ஏற்பாடுகளை அறக்கட்டளை குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !