தை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2431 days ago
ராமேஸ்வரம்: தை அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராடி தரிசனம் செய்தனர்.தை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து, ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின், வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, மஹா தீபாரதனை நடந்தவுடன், பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து, அக்னி தீர்த்த கடலில் நீராடினார்கள். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.