உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்ச கருட சேவையில் ஆண்டாள் திருக்கல்யாணம்

பஞ்ச கருட சேவையில் ஆண்டாள் திருக்கல்யாணம்

சேலம்: பஞ்ச கருட சேவையில் நடந்த ஆண்டாள் திருக்கல்யாணத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலத்தில், பஞ்ச கருட சேவை, கடந்த, 1ல் தொடங்கி நடந்து வந்தது. இதில், மூன்றாம் நாளான நேற்று காலை, திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, வாரணமாயிரம் தலைப்பில், குலசேகர ராமனுஜதாசன் சொற்பொழிவாற்றினார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலை, சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோட்டை, அழகிரிநாத பெருமாளுக்கு சூடப்பட்டது. பின், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை, கோட்டை அழகிரிநாத பெருமாளை ராஜ அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து, திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !