பிப்., 10ல் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம்
ADDED :2435 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவபெருவிழா, வரும், 10ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இது தவிர, கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட விழாக்களும், சிறப்பாக நடக்கின்றன. அந்த வகையில், 2019ம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா, வரும், 10ம் தேதி, காலை, 9:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான தேர் திருவிழா, 16ம் தேதி சனிக்கிழமை காலை, 8:00 துவங்கி நடக்கிறது. 22ல், காலை, 8:00 மணிக்கு, திருக்கல்யாண வைபவத்துடன் பெருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, உதவி ஆணையர், ரமணி, கோவில் செயல் அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் செய்கின்றனர்.