மேலூர் அருகே பனங்காடி கோயில் குளத்தில் மீன்கள் வளர்ப்பு
மேலூர்:மேலூர் அருகே பனங்காடி பெருமாள் கோயில் குளத்தில் மீன்கள் வளர்ப்பவர்கள் மீது இந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித் தனர்.
இங்கு கி.பி., 11ம் நூற்றாண்டுகால லிங்க மன்னர் காலத்திய பெருமாள் கோயில் உள்ளது. கோயில் அருகில் அபிஷேகம் செய்ய குளம் உள்ளது. இந்த குளத்தில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் மீன்கள் வளர்ப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
சுப்புராமன் கூறியதாவது: குளத்து தண்ணீர் குடிநீர், தீர்த்தமாக பயன்படுத்தப்படுகிறது. தனிநபர் ஒருவர் மீன்கள் வளர்ப்பதாக கூறி கழிவுகளை குளத்தில் கொட்டுகிறார். இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதுடன் மாசுபடும் நிலையுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றார்.
அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமசாமி கூறியதாவது: மீன்கள் வளர்ப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.