உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வம்பாகீரப்பாளையத்தில் மயானக்கொள்ளை உற்சவம்

வம்பாகீரப்பாளையத்தில் மயானக்கொள்ளை உற்சவம்

புதுச்சேரி :வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை உற்சவம் நடந்தது. வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் 16ம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாளி, அன்னம், யானை, ரிஷபம், குதிரை வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று 9 மணிக்கு மகா அபிஷேக ஆராதனை முடிந்து, மதியம் 2 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சன்னியாசிதோப்பு இடுகாட்டில் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. இதில் வல்லாள மகாராஜா கதை வர்ணித்து, ‹ரனை அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் வம்பாகீரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (27ம் தேதி) 7 மணிக்கு தெப்பல் உற்சவம், நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !