மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4938 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4938 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4938 days ago
திருவனந்தபுரம்: ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்களை கொண்ட திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், பொக்கிஷங்களை பாதுகாக்க உயர் பாதுகாப்பு கொண்ட புதிய பாதாள அறை உருவாக்கப்பட உள்ளது.திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் உள்ள விலை மதிக்க முடியாத வைரம், தங்கம், வெள்ளி, ரத்தினங்களால் வடிவமைக்கப்பட்ட ஏராளமான ஆபரணங்கள் மற்றும் பொருட்களை, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மதிப்பீடு செய்து வருகிறது.பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்னணு உபகரணங்கள் மற்றும் "இஸ்ரோ உதவியுடன் விஞ்ஞானப்பூர்வமாக பொக்கிஷங்களை மதிப்பிடும் பணிகள் கடந்த வாரம் துவங்கின.இந்நிலையில், மதிப்பீடு குழுவின் ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் நிபுணருமான எம்.வி.நாயர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள அரிய பொருட்களை பாதுகாக்க, பூமிக்கு அடியில் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய அறை ஒன்றை உருவாக்கும் யோசனை உள்ளது. இந்த கட்டமைப்பு தொடர்பான விவரங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். இதற்கான செலவுகள் குறித்தும் மதிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என்றார்.
4938 days ago
4938 days ago
4938 days ago